மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 மா 2019

கிச்சன் கீர்த்தனா: செட்டிநாடு சிக்கன் சூப்!

கிச்சன் கீர்த்தனா: செட்டிநாடு சிக்கன் சூப்!

உடனடி எனர்ஜிக்கு உதவும் சூப்

நம் பாரம்பரிய சமையலில் முக்கியமானது ரசம். இந்த ரசத்தின் அடிப்படையில் தோன்றியதே சூப் எனலாம். நம்முடைய மிளகு ரசம் என்பது மிகவும் சத்து உள்ள சூப் என்றாலும், ஒவ்வொருவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு வகையான சூப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்த வகையில் உடலில் உடனடி எனர்ஜிக்கு சிக்கன் சூப் உதவுகிறது.

தேவை: சிக்கன் (எலும்புடன்) - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 50 கிராம்

சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று

தக்காளி – ஒன்று

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 5 பல்

பட்டை, லவங்கம் - தலா ஒன்று

மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்

தனியாத் தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

கொத்தமல்லி தழை – சிறிதளவு

எலுமிச்சைச் சாறு – தேவைக்கு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: சிக்கனை நன்றாகச் சுத்தம் செய்து வைக்கவும். இஞ்சி, கொத்தமல்லி, பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் பட்டை, லவங்கம் போட்டுத் தாளித்த பின் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக்கொள்ளவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியதும், மிளகுத் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், உப்பு, சிக்கன் சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும். பின்பு கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் சூப்பைப் பரிமாறவும்.

என்ன பலன்?

சிக்கனில் புரதம், கொழுப்புச் சத்து அதிகம். மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள், இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெற நினைப்பவர்கள், எடை குறைவாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு சிக்கன் சூப் உதவும். உடனடி எனர்ஜிக்கும் உதவும்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 2 மா 2019