மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

வளரும் ரியல் எஸ்டேட் சந்தை!

வளரும் ரியல் எஸ்டேட் சந்தை!

வருகிற 2040ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பு ஐந்து மடங்கு வளர்ச்சி காணும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

தேசியத் தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 22ஆம் தேதி ரியல் எஸ்டேட் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கலந்து கொண்டு பேசுகையில், “ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியில் அரசு அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. இத்துறையில் உள்ள குறைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இத்துறையின் பங்களிப்பை உணர்ந்து அரசு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இடைக்கால பட்ஜெட் அறிவிப்பிலும் இத்துறையின் வளர்ச்சிக்கான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. மலிவு விலையில் வீடுகளைக் கட்டித்தரும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்களுக்கு அரசு தரப்பிருந்து பல்வேறு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பு 7 சதவிகிதமாக இருக்கிறது. அது 2040ஆம் ஆண்டுக்குள் இருமடங்கு அதிகரிக்கும். அதேபோல, தற்போது ரூ.12,000 கோடி மதிப்பைக் கொண்டிருக்கும் இந்திய ரியல் எஸ்டேட் சந்தை, 2040ஆம் ஆண்டுக்குள் ரூ.65,000 கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, இத்துறையில் தற்போது 5.5 கோடிப் பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 6.6 கோடியாக உயரும். இத்துறையானது இந்தியப் பொருளாதாரத்தின் இதயமாகச் செயல்படுகிறது” என்று கூறினார்.

சனி, 23 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon