மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 பிப் 2019

நிலக்கரி இறக்குமதி உயர்வு!

நிலக்கரி இறக்குமதி உயர்வு!

நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 5 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் இந்தியா மொத்தம் 189.9 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. இது 2017-18 நிதியாண்டின் இதே காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 180.61 மில்லியன் டன் நிலக்கரியை விட 5.1 சதவிகிதம் கூடுதலாகும். எனினும் ஜனவரி மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 19.59 மில்லியன் டன்னிலிருந்து 17.25 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. இந்த விவரங்களை ஆன்லைன் நிலக்கரி வர்த்தக நிறுவனமான எம்-ஜங்சன் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு நிலக்கரித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியை அதிகரிக்கும்படி, கோல் இந்தியா நிறுவனத்தை நிலக்கரித் துறை அமைச்சரான பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார். 2019-20ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி அளவை ஒரு பில்லியன் டன்னாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், இந்த இலக்கை அடைவது சற்று கடினமான ஒன்றுதான் என்பதால் இலக்குக்கான கால அளவை நீட்டிக்க அரசு ஆலோசித்து வருகிறது. 2018-19ஆம் ஆண்டில் மொத்தம் 652 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்திக்கு கோல் இந்தியா இலக்கு நிர்ணயம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 19 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon