மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 21 செப் 2019

உயிரிழந்த வீரர்களுக்குத் திரையுலகினர் அஞ்சலி!

உயிரிழந்த வீரர்களுக்குத் திரையுலகினர் அஞ்சலி!

காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பி வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் சர்வதேச கவனத்தையும் பெற்றுள்ளது. பல்வேறு தரப்பினரும் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் ஆறுதலைப் பகிர்ந்துள்ளனர்.

சூர்யா

சிஆர்பி வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் கோழைத்தனமான தாக்குதல் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மகன், கணவன், சகோதரரை இழந்த அவர்களது குடும்பத்துக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்து கொள்கிறேன்.

ராதிகா

புல்வாமா தாக்குதலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது மிகவும் கொடுமையானது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்திற்காக எனது இதயபூர்வமான வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

ஜெயம் ரவி

நமது ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் கொடூரமானது, கோழைத்தனமானது. ராணுவ வீரர்களை இழந்த குடும்பங்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள். உயிரிழந்த நமது ஹீரோக்களுக்கு வீர வணக்கம்.

சித்தார்த்

பாகிஸ்தான் தனது தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும். ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வலிமை சேரட்டும். இந்தியா கடுமையான பதிலடி அளிக்க வேண்டும்.

விக்னேஷ் சிவன்

புல்வாமா சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பழிவாங்கும் நோக்கத்தோடு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. உயிர்களை இழந்த நமது சகோதர்களுக்கு இதயம் நிறைந்த அஞ்சலி.

பிரசன்னா

வீரர்களின் இழப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்களுக்காகவும், அவர்களது குடும்பத்துக்காகவும் இதயம் வருந்துகிறது. பயங்கரவாதத்தை எந்தவித கருணை இல்லாமல் அழியுங்கள் அரசே..

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon