மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

ஆக்‌ஷன் நடிகையாகும் த்ரிஷா

ஆக்‌ஷன் நடிகையாகும் த்ரிஷா

இயக்குநர் எம்.சரவணன் இயக்கும் ஆக்‌ஷன் படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளார்.

நடிகர் ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எம்.சரவணன் இயக்கினார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘இவன் வேற மாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களையும் சரவணன் இயக்கினார். ஆனால் இவ்விரு படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. பின்னர் கன்னட மொழியில் நடிகர் புனித் ராஜ்குமாரை வைத்து ‘சக்ரவியூகா’ படத்தை இயக்கினார்.

இப்படத்திற்கு பின் சரவணனுக்கு விபத்து ஏற்பட்டதால் சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் தனது அடுத்த படத்தை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். படம் முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை ஒன்றை அவர் எழுதியுள்ளார். இக்கதையை கேட்ட நடிகை த்ரிஷா இப்படத்தில் நடிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். படக்குழுவினரை தேர்வு செய்யும் பணியில் சரவணன் ஈடுபட்டுள்ளார். இப்படம் முழுக்க ஆக்‌ஷன் கதைக்களம் கொண்ட படமாக உருவாக்கப்படவுள்ளது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon