மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

விவசாயி-அதிகாரி-எம்.எல்.ஏ: ஊதிய முரண்பாடு!

விவசாயி-அதிகாரி-எம்.எல்.ஏ: ஊதிய முரண்பாடு!

மின்னம்பலம்

வேளாண் தொழிலாளர்களுக்கான ஊதியம் கடந்த இருபது ஆண்டுகளாக வெறும் 48 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு சார்பாகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1993-94 முதல் 2011-12ஆம் ஆண்டு வரையில் திறனுடைய வேளாண் தொழிலாளர்களின் சராசரி தினசரி ஊதியம் வெறும் 48 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேநேரம் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் மேலாளர்களின் ஊதியம் மேற்கூறிய காலகட்டத்தில் 98 சதவிகிதம் வரையில் வளர்ச்சி கண்டிருக்கிறது.

1993-94ஆம் ஆண்டில் வேளாண் தொழிலாளர்களின் தினசரி ஊதியம் ரூ.120 ஆக இருந்து, 2011-12ஆம் ஆண்டில் ரூ.177 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் தினசரி சராசரி ஊதியம் 1993-94ஆம் ஆண்டில் ரூ.530லிருந்து 2011-12ஆம் ஆண்டில் ரூ.1,052 ஆக உயர்ந்துள்ளது. மூத்த அதிகாரிகளின் ஊதியம் ரூ.392லிருந்து ரூ.743 ஆகவும், சேவைப் பணியாளர்கள், கடை மற்றும் சந்தை விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.148லிருந்து ரூ.251 ஆகவும், கிளெர்க் பணியில் இருப்போருக்கான ஊதியம் ரூ.274லிருந்து ரூ.446 ஆகவும், தொழில்நுட்ப வல்லுநர்களின் ஊதியம் ரூ.301லிருந்து ரூ.479 ஆகவும் உயர்ந்துள்ளது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon