மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 12 நவ 2019

பார்ட்டியில் முடிவான லைலாவின் ரீஎன்ட்ரி!

பார்ட்டியில் முடிவான லைலாவின் ரீஎன்ட்ரி!

90களின் இறுதியில் கதாநாயகியாக திரையுலகில் நுழைந்த லைலா பத்தாண்டுக் காலம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்து கவனம் பெற்றார்.

அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களின் படங்களில் வலம் வந்த லைலா திருமணத்துக்குப் பின் திரையுலகில் இருந்து விலகினார். லைலா, பிரசன்னா இணைந்து நடித்த ‘கண்ட நாள் முதல்’ பரவலாகப் பேசப்பட்ட படம். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரியா இயக்கினார். கார்த்திக் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பிரசன்னா, லைலா, பிரியா, கார்த்திக் குமார் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“நாங்கள் மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. கண்ட நாள் முதல் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து உரையாடினோம்” என்று பிரசன்னா தெரிவித்துள்ளார். இந்தப் படம் உருவாவது உறுதியானால் லைலாவின் இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்குவது உறுதியாகும்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon