மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

விமான விபத்தில் பலியான கால்பந்து வீரர்!

விமான விபத்தில் பலியான கால்பந்து வீரர்!

அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சாலா விமான விபத்தில் பலியானார். இவரது உடல் வெள்ளிக்கிழமை அர்ஜென்டினாவுக்கு கொண்டுவரப்படுகிறது என்று அவரது சொந்த ஊரான ப்ரோகிரெஸோவின் மேயர் ஜூலியோ முல்லர் தெரிவித்துள்ளார்.

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் சாலா தான் ஏற்கெனவே இருந்த பிரெஞ்ச் கிளப் நன்ட்ஸ் அணியில் இருந்து கார்டிஃப் அணிக்கு மாறியதால் அந்த அணியில் இணைய சிறிய ரக விமானத்தில் சென்றுகொண்டிருந்தார். அவரது விமானம் ஜனவரி 21ஆம் தேதி இங்கிலீஷ் சேனல் பகுதியில் மாயமானது.

கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. 28 வயதான சாலாவின் உடலைக் கடந்த வாரம் பிரிட்டிஷ் அதிகாரிகள் அடையாளம் கண்டனர். சாலாவின் குடும்பத்தினரும் அதை உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் 59 வயதான விமானி டேவிட் இபோட்ஸனின் உடல் கண்டுபிடிக்கப்படமுடியவில்லை.

மேயர் ஜூலியோ முல்லர் , வெள்ளிக்கிழமை மதியம் சாலாவின் உடல் அர்ஜென்டினாவிற்கு கொண்டு வரப்பட்டு அன்று அவரது பள்ளியிலும் யூத் கிளப்பின் தலைமையகத்திலும் வைக்கப்படும் என்று கூறியுள்ளார். அதன்பின் இறுதிச்சடங்குக்கான நேரம் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon