மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

கிஸ் டே மட்டும் போதும்: அப்டேட் குமாரு

கிஸ் டே மட்டும் போதும்: அப்டேட் குமாரு

நல்ல வேளை இந்த பிப்ரவரி மாசம் 28 நாள் தான் இருக்குது. ஒவ்வொரு நாளும் கிஸ் டே, ஹக் டே, லவ்வர்ஸ் டேன்னு புதுசு புதுசா கண்டு பிடிச்சு போட்டோ போட்டு கடுப்பேத்திகிட்டு இருக்காங்க. இதுலாம் யாரோட வேலையா இருக்கும்னு தான் காலையில இருந்து யோசிச்சுகிட்டு இருக்கேன். யாரோ நம்ம பையன் தான் லைக்ஸ், ஷேருக்கு ஆசைப்பட்டு போஸ்ட் போட்ருப்பான்னு நினைக்குறேன். ஆனா இன்னைக்கு அதுலயும் மண் விழுந்துருச்சு. ட்விட்டர்ல லைக்ஸ், ஆர்டி எல்லாம் காணாம போயிருச்சு. அப்டேட்டை பாருங்க, கிஸ் டே போஸ்ட்டை யாரு ஆரம்பிச்சான்னு பார்த்துட்டு வாரேன்.

@Kozhiyaar

இங்கு ஒருவரின் எளிமை போற்றப்படுவதற்கு அவர் பெரும் பணம் படைத்தவராய் இருக்க வேண்டியிருக்கிறது!!!

@mohanramko

கஷ்டப்பட்டு சமைப்பவர்களுக்கு கூட கிடைப்பதில்லை. இன்முகத்துடன் உபசரிக்கும் சர்வருக்கே கிடைக்கிறது டிப்ஸ்...

@Annaiinpillai

காலேஜ் படிக்கும் பொழுது 'அம்மா வெளியே போயிட்டு வரனு சத்தமா சொல்லும் பொழுது' நம்முடைய எதிர்ப்பார்ப்ப சரியா புரிஞ்சுக்கிட்டு 'கண்ணா சட்டை பாக்கெட்ல செலவுக்கு காசு வச்சிருக்கனு' திருப்பி சொல்வது தான் உண்மையான டெலிபதி!

@ItsJokker

அம்மாவோட சமையல் அருமையை புரிஞ்சுக்க வெளியூரில படிக்கவோ, வேலை பாக்கணும்னு அவசியமில்லை.

கல்யாணம் முடிஞ்சிருந்தா கூட போதும்..!!

@parveenyunus

ராகுல்காந்திக்கு திருமணம் ஆகாததால், பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளார் -அமித்ஷா #

திண்டுக்கல் சீனிவாசனுக்கு அண்ணன் போல இவரு.

@Thaadikkaran

மினி பஸ்ல ஓடுற பாட்டெல்லாம் என்ன பாட்டுன்னு அவங்களுக்கும் தெரியாது நமக்கும் தெரியாது, நமக்கு தெரிஞ்ச பாட்டு வரும்போது நாமே இறங்க வேண்டிய ஸ்டாப் வந்திருது..!!

@oorkkavalaan

நாம ஆபிஸுக்கு லீவ் போடலாமுனு நினைச்சி ஆசையா போறப்போ அங்க ஏற்கனவே ஒருத்தன் லீவ் எடுத்துட்டு போயிருப்பான்...

@yaar_ni

மோடியின் வருகையால் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது- மதுரையில் தமிழிசை பேட்டி...

நேரா வரவேண்டியவரை காமௌன்ட் செவுர ஒடச்சி திருப்பி விட்டதை சொல்ராங்க போல ..

@tamil_twtz

''ரகசிய காப்புச் சட்டத்தில் மோடியைக் கைது செய்யுங்கள்; அனில் அம்பானிக்கு இடைத்தரகராக செயல்படுகிறார்''

- ராகுல் காந்தி #

என்னாடா இது நவீன காலத்து காமராஜருக்கு வந்த சோதனை

@வெ. பூபதி

கேள்வி கேட்டால், அறிவு வளரும்னு நினைப்பவர்களை விட, அறியாமை வெளியே தெரிஞ்சுடும்னு அமைதியா இருப்பவர்களே அதிகம்!

@Annaiinpillai

என்னப்பா 'நல்லா இருக்கியானு' யாராவது கேட்டா 'நல்லா இல்லைங்குற' உண்மை நிலைய சொல்லாம சிரிச்சிக்கிட்டே ரொம்ப நல்லா இருக்கேனு சொல்றது தான் சாமானியனின் நிலை!

@Kozhiyaar

எங்களுக்கு யாரும் புதிய இந்தியாவை பெற்றுத் தரத் தேவையில்லை!!

இருக்கிற இந்தியாவை பட்டினி போடாமல் காப்பாற்றினாலே போதும்!!!

@Chivni Prakash

வாய்தா

எவ்வளவு அழகான சொல்.

கிஸ்_டே #மெமரீஸ்

@Iamrajipriya

போதுமான இடைவெளியில் பயணிப்பதே அனைவருக்கும் நல்லது என்பதை தண்டவாளங்கள் நமக்கு உணர்ந்துகின்றன..!

@Kozhiyaar

பிப்ரவரி மாதத்தில் ஒரு அரசு விடுமுறை கூட இல்லை என்பது அநியாயத்தின் உச்சம்!!!

-லாக் ஆஃப்

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon