மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

சிவகார்த்தி 15: நாள் குறித்த படக்குழு!

சிவகார்த்தி 15: நாள் குறித்த படக்குழு!

சிவகார்த்திகேயனின் 15ஆவது படத்தின் படப்பிடிப்புப் பணிகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கனா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்திலும் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நடிகர் விஷால் கதாநாயகனாகவும், அர்ஜுன் வில்லனாகவும் நடித்து வெளியான இரும்புத்திரை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன், சிவகார்த்திகேயனின் 15ஆவது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பிப்ரவரி 15ஆம் தேதியன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இப்படத்தின் துணை தயாரிப்பாளர்களான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ், 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஆர்.டி.ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். படத்தொகுப்பாளராக ரூபன் நியமிக்கப்பட்டுள்ளார். இரும்புத்திரை ஏற்கெனவே நல்ல வரவேற்பை பெற்றதனால், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல், ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநரான ரவிகுமார் இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் பிஸியாக உள்ளார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon