மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

வாராக் கடனாகும் முத்ரா கடன்!

வாராக் கடனாகும் முத்ரா கடன்!

முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களில் ரூ.7,277.31 கோடி வாராக் கடனாக மாறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டுக்காக வங்கிகள் வாயிலாக ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படுகிறது. 2018 மார்ச் மாத நிலவரப்படி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களில் சுமார் ரூ.7,277.31 கோடி வாராக் கடனாக மாறியுள்ளதாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளார்.

முத்ரா திட்டத்தின் கீழ் 2018 மார்ச் வரையில் ரூ.5.71 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2019 பிப்ரவரி 1ஆம் தேதி நிலவரப்படி, ரூ.7.59 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் 15.73 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 73 சதவிகித்தினர் பெண்கள் எனவும் ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்தார். வங்கிகளின் கடன் மீட்பு நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் கடன்பெற்று மோசடி செய்யும் திறனுடைய கடனாளிகளின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படுவதாகக் கூறினார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon