மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

90 எம்.எல்: ரசிகர்களுடன் படம் பார்க்கும் ஓவியா

90 எம்.எல்: ரசிகர்களுடன் படம் பார்க்கும் ஓவியா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா கதாநாயகியாக நடித்து வெளியாகும் முதல் திரைப்படம் 90 எம்.எல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது யாருக்காகவும் எதற்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன், எனக்கு எது பிடித்திருக்கிறதோ அதைச் செய்வேன் என்றிருந்த ஓவியாவைத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அந்தப் புகழைப் பயன்படுத்தி சில படங்களை ஒப்புக்கொண்டு திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வராமல் தனக்குப் பிடித்த கதாபாத்திரத்துக்காகக் காத்திருந்தார் ஓவியா. பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழுக்குச் சேதாரம் ஆகிவிடக் கூடாது என்ற தேவையற்ற பதற்றம் ஏதுமின்றி அடல்ட் ஒன்லி வகைப் படத்தில் நடித்துள்ளார்.

ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் விமர்சனங்கள் அதிக அளவில் வர அதற்கான பதிலையும் அதே பாணியில் கூறினார்.

தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 90 எம்.எல் திரைப்படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாக உள்ளது. அன்று தான் ரசிகர்களுடன் சேர்ந்து அதிகாலை சிறப்பு காட்சியைப் பார்க்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நிவிஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைக்கிறார். யோகி பாபு, சிம்பு, பிரபு தேவா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வலம் வருகின்றனர்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon