மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

மாற்றுத் திறனாளிக்கு இந்திய ராணுவம் பாராட்டு!

மாற்றுத் திறனாளிக்கு இந்திய ராணுவம் பாராட்டு!

முதல்முறையாக இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர் யூனிசெப் அமைப்பின் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர்

கோபால் மித்ரா என்பவர் ஐஇடி குண்டுவெடிப்பில் தனது பார்வையை இழந்தார். ஆனால், அவர் தன்னம்பிக்கையை இழக்காமல் சமூகப் பணியில் தனது முதுகலை படிப்பை முடித்தார். லண்டனில் எம்எஸ்சி படித்தார். தற்போது, இவர் யூனிசெப் அமைப்பின் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இந்திய ராணுவம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதுவரை இந்த பதிவு 25,000 லைக்ஸ் மற்றும் ஏராளமான கமென்ட்களைப் பெற்றுள்ளது.

யூனிசெப் அமைப்பில் தொழில்நுட்ப வல்லுநராக பணியமர்த்தப்பட்ட மேஜர்

கோபால் மித்ரா மண்டலம், தேசிய மற்றும் உலக அளவில் குறைபாடுள்ள குழந்தைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைச் செய்யவிருக்கிறார்.

“உலகம் முழுவதும் சுமார் 180 முதல் 220 மில்லியன் இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இதில் பாதி பேர், முன்னேறிய நாடுகளில் வசிக்கின்றனர். அதனால் கிராமப்புறங்களில் பின்தங்கிய குடும்பங்களில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்றால் அது மனித உரிமை மீறலுக்கு உட்பட்டதாகும்.

அவர்களுக்காக மேற்கொள்ளப்படுகிற திட்டங்களில், கொள்கைகளில் அவர்கள் சேர்க்கப்படவில்லையென்றால், ஊனமுற்றோர்களின் மனித உரிமை மீறல் மட்டுமல்லாமல், தேசத்திற்கும் பெரிய இழப்பீடு ஏற்படும்” என்று 2012ஆம் ஆண்டு மேஜர் மித்ரா தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon