மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 12 நவ 2019

ஒரு அடார் லவ்:சட்ட விரோத இணையதளங்களில் வெளியிடத் தடை!

ஒரு அடார் லவ்:சட்ட விரோத இணையதளங்களில் வெளியிடத் தடை!

மலையாள திரைப்பட நடிகை பிரியா வாரியர் நடித்து நாளை (பிப்ரவரி 14) வெளிவர இருக்கும் "ஒரு அடார் லவ்" திரைப்படத்தை சட்ட விரோத இணைய தளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ஜோசப் வலக்குழி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “நடிகை பிரியா வாரியர் மற்றும் நடிகர் ரோஷன் நடித்துள்ள ஒரு அடார் லவ் திரைப்படம் பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகம் உட்பட உலகின் பல்வேறு இடங்களில் 500 திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இந்த படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் சட்ட விரோதமாக வெளியிடப்பட்டால் தமக்கு பொருளாதார ரீதியில் இழப்பு ஏற்படும் என்பதால் சட்ட விரோதமான இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார் அப்போது, இந்த திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு முன்பே சில படங்களை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், அப்படங்கள் எல்லாம் சட்டவிரோதமாக இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon