மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

ரீட்வீட்டில் கோளாறு: ஒப்புக்கொண்ட ட்விட்டர்!

ரீட்வீட்டில் கோளாறு: ஒப்புக்கொண்ட ட்விட்டர்!வெற்றிநடை போடும் தமிழகம்

லைக்ஸ் மற்றும் ரீட்வீட் எண்ணிக்கையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

ட்விட்டரில் பதிவிடப்படும் ட்வீட்டுகளுக்கு வரும் ரீட்வீட்டுகள் மற்றும் லைக்ஸ்களின் எண்ணிக்கையில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக சில புகார்கள் எழுந்தன. இந்தக் கோளாறு ஏற்பட்டது உண்மைதான் என்று ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், கோளாறால் ஏற்பட்ட சிரமத்திற்காக பயனர்களிடம் ட்விட்டர் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் பலரின் ட்வீட்டுகளுக்கு கிடைக்கும் லைக்ஸ் மற்றும் ரீட்வீட்டுகளின் எண்ணிக்கை திடீரென தாறுமாறாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது.

இந்தியாவில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவாகும் ட்வீட்டுகளில், லைக்ஸ் மற்றும் ரீட்வீட்டுகளின் எண்ணிக்கை தாறுமாறாக ஏறுவதையும், இறங்குவதையும் கண்ட ஒருவர் அதை ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தார். இதேபோல உலகம் முழுவதும் பலரும் புகாரளித்ததையடுத்து ட்விட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவு பிரிவினர் பதிவிட்ட ட்வீட்டில், “உலகம் முழுவதும் சிலருக்கு நோட்டிஃபிகேஷன், லைக்ஸ் மற்றும் ரீட்வீட்டுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும். இதனால் ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பு கோருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon