மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 3 டிச 2020

சென்னை பல்கலையில் தேர்வுக் கட்டணம் உயர்வு!

சென்னை பல்கலையில் தேர்வுக் கட்டணம் உயர்வு!

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தேர்வுக் கட்டணம் 50 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 110 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இன்று (பிப்ரவரி 13) சென்னை பல்கலைக்கழகம் சார்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், மாணவர்களின் ஒவ்வொரு பாடப் பிரிவுக்குமான தேர்வுக் கட்டணம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இளங்கலை படிப்புகளுக்குக் குறைந்தபட்சமாக 85 ரூபாய் எனவும், அதிகபட்சமாக 165 ரூபாய் எனவும் தேர்வுக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதுகலை படிப்புகளுக்குக் குறைந்தபட்சமாக 150 ரூபாயும், அதிகபட்சமாக 350 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இளங்கலை படிப்புக்கு 30 சதவிகிதமும் முதுகலை படிப்புக்கு 50 சதவிகிதமும் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்வு நடத்தக் கூடிய செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், புதிய கட்டண முறை நடப்பு தேர்விலிருந்து அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, இளங்கலையில் ஒரு பாடத்திற்கு 60 ரூபாயும், முதுகலையில் ஒருபாடத்திற்கு 100 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக இருந்தது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon