மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

தெகிடி கூட்டணியில் ஐஸ்வர்யா

தெகிடி கூட்டணியில்  ஐஸ்வர்யா

சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படிப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். அமலா பால் கதாநாயகியாக நடித்திருந்த அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தீயா வேலை செய்யனும் குமாரு படத்திலும் துணை நடிகையாக வலம் வந்த அவர் தமிழ்ப் படம் 2 படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கன்னடம், தெலுங்கு, மலையாளம் திரையுலகிலும் வலம் வரும் அவருக்கு அப்படம் முக்கியமான படமாக அமைந்தது. தற்போது அவர் அறிமுக இயக்குநர் சந்தீப் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத அந்த புதிய படத்தில் ஜனனி ஐயர் இணைந்து நடிக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த தெகிடி திரைப்படம் பரவலாக கவனம் பெற்றது. தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா மேனனும் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரு கொலையும் அதைத் தொடர்ந்து அவிழும் மர்மமும் திரைக்கதையில் முக்கிய பங்குவகிக்கிறது. ரொமான்ஸ் காட்சிகளுக்கும் படத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அசோக் செல்வன் இரு விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

அசோக் செல்வனும் ஐஸ்வர்யா மேனனும் இணைந்து 2014ஆம் ஆண்டு நெர்ட்வொர்க் எரர் என்ற குறும்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon