மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

ஹஜ் பயணம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் பயணம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

2019ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு 1,500 பேருக்குக் கூடுதலாக அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமருக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்ரவரி 12) கடிதம் எழுதியுள்ளார்.

இஸ்லாத்தின் அடிப்படையான ஐந்து கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ் என்னும் புனிதப் பயணம் மேற்கொள்ளுதல். அதன்படி உலக நாடுகள் அனைத்திலிருந்தும் சவுதி அரேபியாவிலுள்ள மக்கா நகருக்குச் சென்று வருவதுண்டு. இந்தியாவிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வர்.

தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக அனுமதி கோரி 6,379 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்ல மத்திய அரசு ஒதுக்கியுள்ள இடங்கள் 3,534 தான். இதனால் பலர் யாத்திரை செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தவிர்க்க கூடுதலாக 1,500 பேருக்கு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், “2018ஆம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 3,542 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், நான் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த எண்ணிக்கை 3,816 ஆக உயர்த்தப்பட்டது. அதுபோன்று 2019ஆம் ஆண்டும் ஹஜ் பயணத்துக்காக அனுமதி கோரி விண்ணப்பம் செய்தவர்கள் ஏமாற்றம் அடையாமல் அனைவரையும் பயணம் செய்ய அனுமதிக்கும் வகையில் ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon