மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

பாஜக தனித்துப் போட்டியிடத் தயார்: தமிழிசை

பாஜக தனித்துப் போட்டியிடத் தயார்: தமிழிசை

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால், பாஜகவும் தனித்துப் போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை பிரதமர் தமிழகம் வந்து சென்றுள்ளார். மேலும் அமித் ஷா, நிதின் கட்கரி, ரவி ஷங்கர் பிரசாத் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் தமிழகம் வரவுள்ளனர்.

இந்த நிலையில் மதுரை தல்லாகுளத்தில் இன்று (பிப்ரவரி 13) செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றிபெறும் கூட்டணியாக பாஜக கூட்டணி இருக்கும். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளோடு இணைந்து பணியாற்ற முயற்சி செய்து வருகிறோம்.பிரதமரின் தமிழக வருகை மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே கறுப்புக் கொடி காட்டுகிறவர்கள் பற்றியும் எதிர்வினையாற்றுபவர்கள் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை” என்று தெரிவித்தார்.

அவரிடம் தனித்துப் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு, “அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார். இன்றைய சூழ்நிலையில் கூட்டணி அமைவது தேவையானது, காலத்தின் கட்டாயம். வாக்குகள் சிதறாமல் பெற கூட்டணி தேவை. எனவே கூட்டணி அமைவது தவிர்க்க முடியாதது” என்று பதிலளித்தார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon