மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 மா 2020

கிரிக்கெட்: சமஸ்கிருதத்தில் கமெண்ட்ரி!

கிரிக்கெட்: சமஸ்கிருதத்தில் கமெண்ட்ரி!

வாரணாசியில் நேற்று நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியொன்றில், வீரர்கள் வேட்டி, குர்தாவுடன் களமிறங்கி விளையாடினர்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் செயல்பட்டு வருகிறது சம்பூர்ணானந்த் சமஸ்கிருத வித்யாலயா. இந்த கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, நேற்று (பிப்ரவரி 12) வாரணாசியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் சமஸ்கிருதத்தைக் கற்றுத் தரும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். நெற்றியில் திருமண், வேட்டி, குர்தா ஆகியவற்றுடன் காலணிகள் அணியாமல் வெறுங்காலுடன் களம் கண்டனர் இதில் கலந்துகொண்ட மாணவர்கள்.

மாணவர்களிடையே விளையாட்டு உணர்வை அதிகப்படுத்தும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டதாகக் கூறினார் சம்பூர்ணானந்த் சமஸ்கிருத வித்யாலயாவைச் சேர்ந்த ஆசிரியர் கணேஷ் தத். இந்த போட்டி 10 ஓவர்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது என்று கூறியவர், வாரணாசியில் இருக்கும் எல்லா சமஸ்கிருதப் பள்ளிகளும் இதில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார். “எல்லா மாணவர்களும் வேட்டி குர்தாவுடன் விளையாடினர். சமஸ்கிருத மொழியிலேயே கமெண்ட்ரியும் அளிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.

ஆசிரியர் பவன்குமார் என்பவர் இதுபற்றிப் பேசுகையில், இந்த போட்டி சமஸ்கிருத கிரிக்கெட் லீக் என்று அழைக்கப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்று தெரிவித்தார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon