மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

மெட்ரோவில் இன்றும் இலவசப் பயணம்!

மெட்ரோவில் இன்றும் இலவசப் பயணம்!

புதிதாகத் தொடங்கப்பட்ட சென்னை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையிலான புதிய மெட்ரோ வழித்தடத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

சென்னையில் டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே தொடங்கப்பட்ட புதிய வழித்தடத்தில், கடந்த 10ஆம் தேதி முதல் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10, 11ஆம் தேதிகளில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், குடும்பம் குடும்பமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இதனால் எல்லா ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மக்களின் வரவேற்பைப் பார்த்த மெட்ரோ நிர்வாகம் பிப்ரவரி 12, 13ஆம் தேதிகளில் இலவசமாகப் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. நேற்று (பிப்ரவரி 12) மட்டும் மெட்ரோவில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 792 பேர் பயணம் செய்தனர். ஒரே நாளில் மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை என்ற வகையில் நேற்று அதிகம் பேர் பயணித்துள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 348 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon