மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 மா 2020

திருமண வாழ்வினால் மனச் சிக்கலா?

திருமண வாழ்வினால் மனச் சிக்கலா?

மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக பிரபல பாப் ஸ்டார் ஜஸ்டின் பெய்பர் மனநல சிகிச்சை பெற்று வருகிறார்.

கனடா நாட்டைச் சேர்ந்த பாப் ஸ்டார் ஜஸ்டின் பெய்பர் மன அழுத்தத்திலிருந்து விடுபட சிகிச்சை எடுத்து வருகிறார். 24 வயதான ஜஸ்டின் மனநல சிக்கல்களில் போராடி வருவதாகவும், மருத்துவ ஆலோசனை பெற்று வருவதாகவும் தெரிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜஸ்டினுக்கும், ஹைலே பால்ட்வினுக்கும் நியூ யார்க் நகரில் திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்விற்கும் அவருக்கு ஏற்பட்ட மனச் சிக்கல்களுக்கும் ஏதும் தொடர்பிருக்கும் என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டு வந்தது. எனினும், ஜஸ்டின் சோர்வுடன் இருப்பதாகவும், அவரது திருமணத்திற்கும் மனச் சிக்கல்களுக்கும் தொடர்பில்லை எனவும் ஜஸ்டின் தரப்பு விளக்கமளித்துள்ளது.

மனநல சிக்கல்களில் போராடி வருவதாக கடந்த ஆண்டு மார்ச் மாதமே ஜஸ்டின் பெய்பர் வெளிப்படையாக தெரிவித்தார். மார்ச் மாதத்தில் வாக் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் என் மனச்சிக்கல்கள் குறித்து இதுவரை பேசியதில்லை. பல சிக்கல்களுக்கு இடையே நான் நகர்ந்துகொண்டிருக்கிறேன். அவை குறித்து நான் பேசியதில்லை. மிகவும் தனிமையில் இருக்கிறேன். எனக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. சில சமயம் என் வீட்டுக்கு செக்யூரிட்டி தாமதமாக வந்தால் நான் உயிருடன் தான் இருக்கிறேனா, இன்னும் சுவாசிக்கிறேனா என்று சரிபார்த்துக்கொள்வேன்” என்று தெரிவித்திருந்தார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon