மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

சரிவை நோக்கி தேயிலை ஏற்றுமதி!

சரிவை நோக்கி தேயிலை ஏற்றுமதி!

கென்யாவின் கடுமையான போட்டி காரணமாக இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக உள்ள இந்தியாவுக்குக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2017-18ஆம் ஆண்டில் மொத்தம் 256.57 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை இந்தியா ஏற்றுமதி செய்திருந்த நிலையில், இந்த ஆண்டில் 8 மில்லியன் முதல் 10 மில்லியன் வரையில் ஏற்றுமதி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், கென்யாவின் உற்பத்தி 60 மில்லியன் கிலோ அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தேயிலை விலை குறைவாக இருப்பதும் இந்தியாவின் ஏற்றுமதிச் சரிவுக்குக் காரணமாக இருக்கிறது.

2019ஆம் ஆண்டில் இரானுக்கான இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 30 மில்லியன் கிலோவுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டில் இரானுக்கு 28 மில்லியன் கிலோ தேயிலையை இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. தேயிலை உற்பத்தியைப் பொறுத்தவரையில், பாதகமான பருவநிலை காரணமாக உற்பத்தி 5 முதல் 10 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், சென்ற ஆண்டில் தேயிலை உற்பத்தி 6 சதவிகித உயர்வுடன் 1.33 பில்லியன் கிலோவாக இருந்தது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon