மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 பிப் 2019

மத்திய பட்ஜெட்: பாராட்டிய அதிமுக எம்.பி!

மத்திய பட்ஜெட்: பாராட்டிய அதிமுக எம்.பி!

2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் பாராட்டியுள்ளார்.

“பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே ஐந்து பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதிலெல்லாம் இந்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கலாம். ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் வரவுள்ள மக்களவைத் தேர்தல்தான். இது தேர்தல் அறிக்கைதானே தவிர இடைக்கால பட்ஜெட் அல்ல” என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை மக்களவையில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 11) மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக முயற்சி செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் மக்களவையில் பேசிய தம்பிதுரை வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை, தூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா, பணமதிப்பழிப்பு, தமிழகத்துக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து புள்ளி விவரங்களுடன் மத்திய அரசை கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார்.

பாஜக தேசியச் செயலாளர் முரளிதர ராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தம்பிதுரையின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளனர். அதே சமயத்தில் தம்பிதுரையின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை பி.ஆர்.சுந்தரம் பிப்ரவரி 12ஆம் தேதி மக்களவையில் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “வீட்டு வசதி மற்றும் கட்டுமானத் துறைக்கு வரிச்சலுகை போன்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய இடைக்கால பட்ஜெட் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திருப்பதுடன், நிதிநிலை சமன்பாடும் பாதிக்கப்படாமல் பட்ஜெட் அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். இந்த இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம் அறிவிக்கப்பட்டது சிறப்பாகும்” என்றார்.

மேலும், “ரூ.75,000 கோடி செலவில் சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும்; இதன்மூலம் 12 கோடி விவசாயக் குடும்பங்கள் பயனடைவார்கள்; 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக வழங்கப்படும் என்ற திட்டம் விவசாயிகள் வாழ்க்கையில் ஒளியேற்றும். காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வேணுகோபாலைத் தவிர, இந்தியாவில் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தை வரவேற்கிறார்கள்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

புதன் 13 பிப் 2019