மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 2 ஜூலை 2020

4ஜி சேவை: ஜியோ முதலிடம்!

4ஜி சேவை: ஜியோ முதலிடம்!

நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நாட்டின் 15 மிகப் பெரிய நகரங்களில் 4ஜி இணைய சேவை கிடைப்பது குறித்த ஆய்வறிக்கையை ஊக்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 98.8 சதவிகிதப் பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ சேவை வழங்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் நாட்டின் 90 சதவிகித பகுதிகளில் தனது 4ஜி சேவையை வழங்குகிறது. வோடஃபோன் நிறுவனம் 84.6 சதவிகிதமும், ஐடியா நிறுவனமும் 82.8 சதவிகிதமும் சேவை வழங்குகின்றன.

மிக வேகமான டேட்டா சேவை வழங்கும் நெட்வொர்க் நிறுவனமாக ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது. 2018ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிலவரப்படி, ஏர்டெலின் டேட்டா வேகம் 11.23 எம்.பி.பி.எஸ்ஸாக இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து வோடஃபோன் டேட்டா வேகம் 9.13 எம்.பி.பி.எஸ்ஸாக இருக்கிறது. இப்பிரிவில் ஜியோ மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கின்றன. சுமார் 5.95 கோடி மொபைல் போன்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த விவரங்களை ஊக்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon