மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 18 செப் 2019

துல்கருக்கு ஜோடியாகும் பிரியா

துல்கருக்கு ஜோடியாகும் பிரியா

நடிகர் துல்கர் சல்மான் படத்தில் நடிக்க நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே ஏராளமான ரசிகர்களைத் தன் வசப்படுத்தி வைத்திருந்தார். பின்னர் சின்னத்திரையில் களம்புகுந்ததால் மேலும் பிரபலமடைந்தார். மேயாத மான் படம் மூலம் சினிமா துறைக்கு முதன்முதலாக பிரியா பவானி சங்கர் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இவர், கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் நடித்தார். தற்போது இவர் நடித்த மான்ஸ்டர், குருதி ஆட்டம் ஆகிய படங்கள் வெளியாகத் தயாராகி வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் நடிகர் ஜீவா நடிக்கும் படத்திலும், நடிகர் அருள்நிதி நடிக்கும் படத்திலும் நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவிருக்கும் படத்திலும் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கவுள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளார். படக்குழு பற்றிய இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon