மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 மே 2020

தங்களையே ஏமாற்றும் பெற்றோர்!

 தங்களையே ஏமாற்றும்  பெற்றோர்!

குழந்தைகளிடம் காணும் சில குணங்களைக் கண்டு சம்பந்தப்பட்ட பெற்றோர்களும் உறவினர்களும் சுற்றத்தினரும் அதிசயிக்கின்றனர். வளர்ந்த பின்னர், அதே குழந்தைகளிடம் அதே குணங்களைச் சகிக்க முடியாமல் தவிக்கின்றனர். பிடிவாதம், சொல்பேச்சுக் கேளாமை, அதிகப் பிரசங்கித்தனம் என்று பெயரிட்டு, அந்தக் குணங்களின் பட்டியலைத் தயார் செய்கின்றனர். ஆனால், சிறு வயதில் அதேவிதமான செயல்பாடுகளைத் தட்டிக்கொடுத்ததும் அவர்கள் தான் என்பதை மறந்துவிடுகின்றனர்.

தான் விரும்புவது வேண்டும் என்று குழந்தைகள் அடம்பிடிக்கும்போது, பெரும்பாலான பெற்றோர்கள் ‘இல்லை’ என்ற பதிலைச் சொல்வது கிடையாது. மீறிச் சொன்னால், குழந்தையின் அழுகை அல்லது பிடிவாதம் அதிகமாகும் என்று பின்வாங்குகின்றனர். அது மட்டுமல்லாமல் ஏமாற்றத்தைத் தங்களது குழந்தைகள் சந்திக்கக்கூடாது என்றும் விரும்புகின்றனர். தங்களுக்குக் கிடைக்காதது குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தைச் செயல்படுத்துகின்றனர். இதனைக் குழந்தைகள் புரிந்துகொண்டால் பிரச்சினை இல்லை. அப்படிப் புரிந்துகொள்ளாதபோது, அக்குழந்தைகளின் பிடிவாதம் மேலும் அதிகமாகிறது.

ஏமாற்றம் என்ற வார்த்தையையே சீரணிக்க முடியாத நிலைக்குச் செல்கின்றனர். இதன் விளைவாக, குழந்தைகளுக்குக் குடும்பத்தினர் மீது கடுமையான வெறுப்பு ஏற்படுகிறது. கடுமையான வார்த்தைகள், வன்முறைகளைப் பிரயோகிக்கும் குழந்தைகளும் உண்டு. இதுபோன்ற காலகட்டத்தில், சகிப்புத்தன்மையற்று தன்னை வதைப்பது அல்லது பிறரை வதைப்பது என்னும் குணம் இக்குழந்தைகளிடம் பெருகுகிறது. இதுவே பல்வேறு நடத்தைக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. வளர்ந்த பின்னர் இது மேலும் அதிகமாகிறது.

இதனைத் தீர்க்க வழி தெரியாமல் திண்டாடும் பெற்றோர்கள், இறுதியாக மனநலச் சிகிச்சைகளை நாடுகின்றனர். குழந்தைகளின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து உடனுக்குடன் அதனைச் சீர்செய்ய வேண்டியது அவசியம். மைண்ட் ஸோன் மருத்துவமனையில் தரப்படும் சிகிச்சைகள், இதுபோன்ற குழந்தைகள் நலத்தில் ஏற்படும் கோளாறுகளை எளிதாகத் தீர்க்கின்றன. இதனை மருத்துவ உளவியல் நிபுணர் சுனில் குமார் மற்றும் உளவியல் மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு:

மைண்ட் ஸோன் மருத்துவமனை

நம்பர் 58/2, முதல் அவென்யூ,

சாஸ்திரி நகர், அடையார்,

சென்னை – 600020

இமெயில்: [email protected]

அலைபேசி: 044-24460101, 9444297058, 9176055660

விளம்பர பகுதி

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon