மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 28 ஜன 2020

நான் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டேன்!

நான் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டேன்!

தான் நடித்த பாடல் காட்சிகள் வெளியான பிறகு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டதாக நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தெரிவித்துள்ளார்.

கண்ணடிப்பதற்கு புகழ் பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் பிப்ரவரி 14ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது. ரொமான்டிக் - காமெடி திரைநடை கொண்ட இப்படம் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் பிரியா பிரகாஷ் வாரியரின் பேட்டி வெளியாகியுள்ளது. அதில், இப்படம் குறித்தும், தனது அனுபவங்கள் குறித்தும் பிரியா பகிர்ந்துகொண்டுள்ளார்.

‘கண்ணடிக்கும் பெண்’ என்ற பட்டத்தை எப்படி கையாள்கிறீர்கள்?

அங்கீகாரமும், பிரபலமும் அடைவதற்கு அந்தப் பட்டம் எனக்கு பெரிதும் உதவியுள்ளது. அந்த பட்டத்தை விட்டு நான் ஒரு நாள் வெளியேறிவிடுவேன்.

நீங்கள் பிரபலமானபோது உங்கள் குடும்பத்தினர் என்ன செய்தார்கள்?

எல்லாமே எனக்கும் என் குடும்பத்துக்கும் புதிதாகத்தான் இருந்தது. மொபைல் போன் கூட என்னிடம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். சில நாட்கள் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்துவிட்டார்கள். என் பெற்றோர் பயந்ததால் என்னை வெளியே அனுப்ப மறுத்துவிட்டனர்.

கிண்டல்களையும், விமர்சனங்களையும் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

முன்பு எனக்கு அது ஒரு தொல்லையாகவே இருந்தது. கிண்டல்களை எப்படி கையாளுவது என எனக்கு தெரியவில்லை. ஏனென்றால், அவர்களே எனக்கு முதலில் ஆதரவளித்துவிட்டு பின்னர் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தொடக்கத்தில் வேதனையாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது நான் அவை குறித்து கவலைப்படுவதில்லை

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon