மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 அக் 2019

வளரும் ஸ்மார்ட்போன் சந்தை!

வளரும் ஸ்மார்ட்போன் சந்தை!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 2018ஆம் ஆண்டில் 14.5 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் டேட்டா சலுகைகள் அதிகளவில் வழங்கப்பட்டு வருவதால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பரிமாற்றங்களும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அதிகப்படுத்தியுள்ளன. 2018ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 142.3 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய 2017ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 124.3 மில்லியனாகும்.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 2018ஆம் ஆண்டில் 14.5 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக ஆய்வு நிறுவனமான ஐடிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் மட்டும் 19.5 சதவிகித உயர்வுடன் மொத்தம் 36.3 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பரில் இந்த எண்ணிக்கை 30.3 மில்லியனாக இருந்தது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு ஆன்லைன் விற்பனையில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதால் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon