மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 28 ஜன 2020

வலிக்காத மாதிரி கலாய்க்கனும்: அப்டேட் குமாரு

வலிக்காத மாதிரி கலாய்க்கனும்: அப்டேட் குமாரு

டிக் டாக் வீடியோ போடுறேங்குற பேருல இங்க கொஞ்ச பேர் பண்ணுன அலப்பறை எல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்ல. சென்சார் சர்டிபிகேட் இல்லங்குறதுக்காக இப்படியா.. காமெடி கலாய் வீடியோக்களும் வந்துகிட்டுதான் இருந்தது. மீம் கிரியேட்டர்ஸ்லாம் அதுக்கு அப்கிரேட் ஆகி ஓட்டி தள்ளுனாங்க. பாவம் அதுல அதிகமா மாட்டுனது என்னமோ தமிழிசை அக்கா தான். காலையில பேட்டி கொடுத்தா மத்தியானம் அந்த ஆடியோக்கு டிக் டாக் வீடியோ ரெடி ஆகிடும். அந்த பாதிப்புல தானோ என்னவோ இதுக்கு தடை போட்டா நான் ஹாப்பி அண்ணாச்சின்னு அவங்க சொல்லிருக்காங்க. சரி ஆனா இப்படியே போச்சுன்னா மீம் போடக் கூடாதுன்னு செல்லூர் ராஜும், ஜெயக்குமாரும் வருவாங்க. ஹேஸ்டேக் போடக்கூடாதுன்னு மோடி வருவார்.. கடைசில இந்த குமார் வேலைக்கே உலை வைச்சுருவாங்க போலயே.. எப்பா கலாய்க்குறவங்க வலிக்காத மாதிரி காய்ங்க... இப்ப அப்டேட்டை பாருங்க. வந்து உங்களுக்கு கிளாஸ் எடுக்குறேன்.

@Kozhiyaar

உங்களுக்கு பிடித்ததை எல்லாம் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை!!

@mohanramko

தினமும் தொங்கிகிட்டே இருந்தும், கீழே விழும்போது தான் தெரியும், பழத்தின் சுவை...

@Annaiinpillai

நாடாளுமன்ற தேர்தலில் அமமுக தனித்து போட்டி - தங்க தமிழ்ச்செல்வன் # உங்க கூட்டணி கதவ யாரும் தட்டலையா ப்ரோ!

@selvachidambara

வீட்டைச் சுற்றி தோட்டம் போட்டேன் !

தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டேன்

வேலியைச் சுற்றி காவல் போட்டேன்

காவலைப் பற்றி கவலைப்பட்டேன்

@Ramesh46025635

"கடன் இல்லாமல் யாருப்பா இருக்காங்க" என்ற வார்த்தைகள் தான் நாம் கடன்காரனாக முதற் காரணம்....!!!

@Annaiinpillai

இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில், தமிழிசை மெட்ரோவில் பயணம் - செய்தி

நல்ல வேலை ஏழை தாயின் மகள்னு சொல்லல?!

@Vicky_stirring

நான் விலாங்கு மீன் இல்லை டால்பின் - ஜெயக்குமார்

தேர்தல் சுனாமி வந்தா எல்லாம் க்ளோஸ்..?!!

@Thaadikkaran

மோடி அரசுக்கு வலிமை தந்தால் வருமானம் இரட்டிப்பாகும்-முரளிதரராவ்# யாரோட வருமானம்னு சொன்னா நல்லா இருக்கும்..!

@Annaiinpillai

மத்திய அரசுக்கு ஒருபோதும் அசைந்து கொடுக்க மாட்டோம் - ஓ.பன்னீர் செல்வம் # ஆனால் முட்டு கொடுப்போம் அதானே!?

@Suyanalavaathi

"மத்திய அரசு முறையாக நிதி வழங்குவதில்லை" -சட்டப்பேரவையில் பன்னீர் செல்வம் #

சார் !! மத்திய அரசும் , மோடி அரசும் வேர வேர னு நினைச்சுட்டு இருக்கீங்க போல.. ரெண்டும் ஒன்னு தான் !!

@mangudiganesh

மல்லையா தப்பியோடக் காரணம், மோடியின் கடும் நடவடிக்கையே _அமித்ஷா!

அருண்ஜெட்லியை பார்த்து பேசிட்டு 'டாட்டா'காட்டிட்டு தான் வந்தேன் மல்லையா சொன்னாரே..?

@vvjayk

முரசொலி என்பது ஸ்டாலினோட FAKE ID மாதிரி. தனது கோபங்களை கடுமையான சொற்களில் பதிவிட பயன்படுத்தி கொள்கிறார்.

@mugamoodi11

அரை அடி குழிதோண்டி

ஆளுக்கொரு மரம் நட்டிருந்தால்...

400 அடிக்கு போர் போட அவசியம் வந்திருக்காது.!!

@ajmalnks

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை திடீர் ஒத்திவைப்பு.

-செய்தி

ச்சே ட்ரெண்டிங் செய்ய திரும்ப வந்த வாய்ப்பு கைநழுவிப் போயிடுச்சே...ட்விட்டர் போராளிகள்

@RahimGazzali

வேலைவாய்ப்புகளை பெருக்கிட 5 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் இல்லை!- தம்பிதுரை

பாஸ்... அந்த பக்கோடா கடையை மறந்துட்டீங்களே?!..

@parveenyunus

இந்தியாவில் காமராஜர் ஆட்சியை கொடுப்போம்- மோடி # பசு பாதுகாப்புன்னு சொல்லி ராமராஜன் ஆட்சியை இல்ல குடுத்திருக்கீங்க..?

@Uk_Twittz

தேர்தல் கூட்டனி பற்றி ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு.. -செய்தி

அதிமுக & பாஜகவினர் வெடி வெடித்து கொண்டாட்டம்..

@shivaas_twitz

தினமும் காலைல, இன்னைக்கு என்ன 'டே'னு காலெண்டரையும் ட்விட்டரையும் பார்க்க வேண்டியிருக்கு

@HAJAMYDEENNKS

தேர்தலில் தனியா நிற்கிறோம்னு சொல்கிற கட்சிகள் எல்லாம் நோட்டாவுக்கு துணையாகவே நிற்கின்றன !

@h_umarfarook

மோடி பங்கேற்ற அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து , தேசிய கீதம் பாடாதது ஏன் ?- ஸ்டாலின்

அவர் சொன்ன மற்ற பொய்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு இப்போ இதைப் பற்றி பேசிக்கிட்டு இருக்கணும்னு தான் !

-லாக் ஆஃப்

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon