மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

மைனஸ் டிகிரியில் அனுஷ்கா டீம்!

மைனஸ் டிகிரியில் அனுஷ்கா டீம்!

அனுஷ்கா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள சைலன்ஸ் திரைப்படம் அமெரிக்காவில் மைனஸ் டிகிரி குளிரில் படமாக்கப்படவுள்ளது.

பாகமதி திரைப்படத்துக்குப் பின் அனுஷ்கா நடிக்கும் திரைப்படம் சைலன்ஸ். 2011ஆம் ஆண்டு ‘வஸ்டடு நா ராஜு’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஹேமந்த் மதுகர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் அனுஷ்கா செவித்திறன், பார்வைத்திறன் குறைபாடுள்ளவராக நடிக்கிறார். இதற்காக பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டுவந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதால் அந்தந்த திரையுலகைச் சார்ந்த நடிகர்களைப் படத்தில் இணைக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டது.

மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் இணைந்துள்ளனர். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சனும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அமெரிக்காவில் மைனஸ் டிகிரி குளிரில் கதை நடைபெறவுள்ளதால் நடுங்கும் குளிரில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. படக்குழுவுக்கு இது கடுமையான சவாலாக இருந்தாலும் காட்சிகள் மிக அழகாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோனா வெங்கட் தனது கோனா பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். டி.ஜி.விஸ்வபிரசாத் இணைந்து தயாரிக்கிறார். மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon