மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ரஜினி வெளியிட்ட நன்றிக் கடிதம்!

ரஜினி வெளியிட்ட நன்றிக் கடிதம்!

தனது மகளின் திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் நேற்று (பிப்ரவரி 11) சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர். திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ரஜினிகாந்த் ஒரு நன்றிக் கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

அக்கடிதத்தில், “என் மகள் சவுந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித்தலைவர் திரு.ஸ்டாலின், மத்திய அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன், திரு. முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திரு.திருநாவுக்கரசர், திரு.அமர்நாத், திரு.கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரை உலகப் பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல் துறை நண்பர்கள், திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் திருமணம் டிசம்பர் 12ஆம் தேதியன்று நடைபெற்றபோது அவ்விழாவில் ரஜினிகாந்தும், அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் கலந்துகொண்டனர். தற்போது சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு விழாவில் முகேஷ் அம்பானி தனது மனைவி நிதா அம்பானியுடன் வந்து கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon