மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் கட்டாயமில்லை!

அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் கட்டாயமில்லை!

தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடாததையடுத்து, சம்பந்தப்பட்ட அரசு செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 10ஆம் தேதியன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படவில்லை. அதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வேம்பு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று (பிப்ரவரி 12) நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தது. “விதிகளின் படி, பிரதமர் மற்றும் முதல்வர் கலந்துகொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கட்டாயமல்ல. இது தெரியாமல் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது” எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon