மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

குழந்தைகளை நல்லா பாத்துக்குவோம்: சேவாக் கிண்டல்!

குழந்தைகளை நல்லா பாத்துக்குவோம்: சேவாக் கிண்டல்!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாள், டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வருகை தர உள்ளது.

இரு அணிகள் பங்கேற்கும் ‘பேடிஎம் டிராபி’ தொடர் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டிக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்று தற்போது விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருந்த போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெய்ன் இந்திய வீரர் ரிஷப் பந்தை போட்டியின் போது, “எனது குழந்தையை பராமரிக்க என் வீட்டிற்கு வா” என்று கிண்டல் செய்தார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக ரிஷப் பந்த் பெய்ன் வீட்டிற்கே சென்று அவரது குழந்தையை தூக்கி புகைப்படம் எடுத்தார். அந்தப் புகைப்படத்தை பெய்னின் மனைவி சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு நல்ல குழந்தை பராமரிப்பாளர் என்று கூறி ரிஷப் பந்தை குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அந்தச் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இந்தியாவுக்கு வருகை தரும் ஆஸ்திரேலிய வீரர்களைக் குழந்தைகளாக சித்தரித்து ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது. வீரர்களுக்கான அறையில் பச்சிளம் குழந்தைகள் ஆஸ்திரேலிய அணியின் சீருடையை அணிந்து தவழ்ந்தபடி வருவதாகக் காட்டப்பட்டிருந்தது. இதில் விரேந்திர சேவாக் நடித்துள்ளார். குழந்தைகளைப் பத்திரமாக பார்த்துக் கொள்வோம் என்று சேவாக் கூறுவதாக அந்த விளம்பரம் அமைந்துள்ளது. இந்த விளம்பரத்திற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய வீரர்களைச் சீண்டும் விதமாக அமைந்துள்ளதால் அங்குப் பலரும் இந்த வீடியோவை விமர்சித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “எச்சரிக்கிறேன்... ஆஸ்திரேலியா அணியை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் சேவாக். உலகக்கோப்பை போட்டியின்போது யார் பேபி சிட்டராக இருந்தார்கள் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

குழந்தைகளை நல்லா பாத்துக்குவோம் வீடியோ

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon