மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

டிஜிட்டலில் தமிழ்: துணைவேந்தர் உறுதி!

டிஜிட்டலில் தமிழ்: துணைவேந்தர் உறுதி!

தமிழை டிஜிட்டல் வடிவத்திற்கு முழுமையாகக் கொண்டுசெல்வதே மாநாட்டின் நோக்கம் என அண்ணா பலகலைக்கழத்தின் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

18ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான கூட்டம் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்றது. இதில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா பங்கேற்றார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். “தமிழை டிஜிட்டல் வடிவத்திற்கு முழுமையாகக் கொண்டுசெல்வதே மாநாட்டின் நோக்கம். தமிழ் மொழியின் அடிப்படையில், இணையம் வழியாக அனைத்தையும் பயன்படுத்த முடியும். மென்பொருள் பயன்பாட்டைத் தமிழில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ், இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்தையும் இணையத்தில் தமிழ் மொழியில் கொண்டுவந்தால், மாணவர்கள் பள்ளியில் பயிலும்போதே இணையம் வழியாக அறிவியல் தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ள முடியும். தாய்மொழியில் பாடங்களின் அடிப்படையைப் புரிந்துகொண்டு கற்பது, உயர் கல்வியை எளிதாகக் கற்பதற்கும் உதவும்” என தெரிவித்தார்.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது என்று கூறிய சூரப்பா, இதற்கு மாறாகத் தமிழகத்தில் தாய்மொழியில் அறிவியலைக் கற்க மாணவர்கள் தயக்கம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon