மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

யோகி பாபு படத்தில் இணைந்த ஜனனி

யோகி பாபு படத்தில் இணைந்த ஜனனி

தமிழ், மலையாளம் திரையுலகில் கதாநாயகியாக வலம் வரும் ஜனனி ஐயர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

யோகி பாபு முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் கூர்கா படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளன. தற்போது அவர் தர்மபிரபு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை விமல் - வரலக்ஷ்மி நடித்துள்ள 'கன்னிராசி' படத்தின இயக்குநர் முத்துகுமரன் இயக்குகிறார்.

ஃபேண்டஸி காமெடி வகையைச் சேர்ந்த இப்படத்தில் சமகாலக் கதையும் எமலோகக் கதையும் சேர்ந்து பயணிக்கிறது. எமதர்மராஜா ஒரு காதல் ஜோடிக்கு உதவுவது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அழகம் பெருமாள் அரசியல்வாதியாக நடிக்க அவரது மகளாக ஜனனி ஐயர் ஒப்பந்தமாகி நடித்துள்ளார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளது. 15 நாள்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் ஜனனி 8 நாள்கள் கலந்துகொண்டுள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும், இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். விரைவில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon