மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஆக 2020

ஐடி நிறுவனங்களில் பெருகும் வேலை!

ஐடி நிறுவனங்களில் பெருகும் வேலை!

2018ஆம் ஆண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கம் நான்கு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

டி.சி.எஸ்., விப்ரோ உள்ளிட்ட இந்தியாவின் 10 முன்னணி ஐடி நிறுவனங்கள் 2018ஆம் ஆண்டில் மொத்தம் 1,14,390 பொறியாளர்களுக்கு வேலை வழங்கியுள்ளன. இது 2017ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு பெற்றோரின் எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாகும். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகபட்ச வேலைவாய்ப்புகள் 2018ஆம் ஆண்டில்தான் உருவாக்கப்பட்டுள்ளன என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்க அரசின் நெருக்கடிகளால் அங்கு பணியமர்த்தும் நடவடிக்கை மேம்பட்டு வருவதாலேயே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்கள் எதையும் நிறுவனங்கள் வெளியிடவில்லை. டி.சி.எஸ்., காக்னிசண்ட், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல்., விப்ரோ ஆகிய ஐந்து நிறுவனங்கள் மட்டும் சென்ற ஆண்டில் மொத்தம் 99,100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன. இந்நிறுவனங்கள் 2017ஆம் ஆண்டில் வெறும் 19,360 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியிருந்தன. இந்நிறுவனங்கள் மொத்த பணியாட்கள் பலம் தற்போது 12.3 லட்சமாக உயர்ந்துள்ளது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon