மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

சதி வலையில் கட்டப்பட்டுள்ள தமிழ் சினிமா!

சதி வலையில் கட்டப்பட்டுள்ள தமிழ் சினிமா!வெற்றிநடை போடும் தமிழகம்

தமிழ் சினிமா 365: பகுதி - 38

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் புத்திசாலி விநியோகஸ்தர், அல்லது ஏற்கெனவே அனுபவபட்டவர்கள் உற்சவரிடம் தனிப்பட்ட முறையில் பேரம் பேசி உற்சாகப்படுத்தி விட்டால் செய்கூலி சேதாரம் இல்லாமல் தப்பித்து விடலாம்.

அவ்வாறு செய்யாமல் நான் எந்த பாக்கியும் யாருக்கும் கொடுக்க வேண்டியது இல்லை என்பவர்கள், குறைந்தபட்ச பாக்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அல்லது அவர்களிடம் படம் வாங்கியவர்கள் சினிமா தொழிலே வேண்டாம் என்கிற அளவுக்கு மறைமுக தாக்குதலை தொடங்கி முடிப்பார்கள்.

அந்த படத்தின் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களிடம் முந்தைய படம் வெளியீட்டின் போது கணக்கு முடிக்கும் போது தயாரிப்பாளர் திருப்பிக்கொடுக்க வேண்டிய பாக்கிஇருந்திருக்கும். பரஸ்பர நட்பின் அடிப்படையில் பணம் வருகிற போது தருகிறேன் என கூற விநியோகஸ்தர் சரி என கூறியிருப்பார். தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்கியிருக்க மாட்டார்.

விநியோகஸ்தர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய புள்ளிக்கு வேண்டப்பட்ட தியேட்டர் உரிமையாளருக்கு தயாரிப்பாளர் தரப்பில் பாக்கி இருந்திருக்கும் அல்லது அந்த படத்தை வாங்கிய ஏரியா விநியோகஸ்தர் தியேட்டர் உரிமையாளருக்கு வேறுபடம் திரையிட்ட போது வாங்கிய அட்வான்ஸ் தொகையில் பாக்கி கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.

ரிலீஸ் ஆக உள்ள படத்தில் நடித்துள்ள நடிகர் நடித்து ஏற்கெனவே வெளியான படத்தின் மூலம் விநியோகஸ்தருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும், இவை அனைத்தும் மொத்தமாக கூட்டமைப்பில் புகாராக கொடுக்கப்பட்டிருக்கும், அல்லது கேட்டு பெறப்பட்டிருக்கும். தொழில்ரீதியாக படம்வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் நாளில் அல்லது படத்தை இன்னார் வாங்கி உள்ளார் என்ற செய்தி வெளியாகிற போது, இது போன்ற புகார்கள் இருப்பதாக சம்பந்தபட்ட படத்தின் தயாரிப்பாளர், படத்தின் உரிமையை வாங்கிய விநியோகஸ்தருக்கு இந்த தகவலை முறைப்படி கூறமாட்டார்கள்.

படத்தின் தயாரிப்பாளரும் நாம் ஏற்கெனவே யாருக்காவது பாக்கி கொடுக்க வேண்டுமா என்கிற முன் யோசனையும் செய்து அதனை சரி செய்கிறவர்கள் மிக மிக குறைவு.

இந்த அஜாக்கிரதையை கூட்டமைப்பு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது இங்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோன்று சம்பவங்கள் வேறு எந்தமொழி திரைத் துறையிலும் காணமுடியாது.

தயாரித்தவரும், வாங்கியவரும் அந்த படத்தில் எந்த முதலீடும் செய்யாதவர்கள்முன் குற்றவாளிகள்போலநிற்கும் அவலம், அவமானம் எந்த தொழிலும் இல்லாதது. அந்த படத்தில் நடித்ததற்காக நாயகன் பாக்கி பணத்தை வசூலிக்க பலிகடாவாக நிறுத்தப்பட்டிருப்பார்.

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நாயகன் ஆகியோரது சுய மரியாதை சீண்டப்படும். தவறான நடைமுறை என்றாலும் சுயமரியாதையா,பணமா என்கிற சுழலுக்குள் சம்பந்தபட்டவர்கள் சிக்க வைக்கப்படுவார்கள். அறிவித்த தேதியில் படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்கிற சுய மரியாதை பார்க்கிற நடிகன் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவோ அல்லது முழு சம்பளத்தையும் இழக்கவோ வேண்டிய நிலைமை உருவாக்கப்படும். சம்பந்தபட்ட படத்திற்கும், கூறப்படும் புகாருக்கும் சம்பந்தமில்லை என்ற வாதத்தை இங்கு காது கொடுத்து கேட்க மாட்டார்கள்.

எந்த ஒரு வரையறுக்கப்பட்ட சட்டத்திற்கும் கூட்டமைப்பு கட்டுப்படுவதில்லை. அப்படியே சட்டப்படி படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என்று நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டாலும் அதனை அமுல்படுத்த முடியாதவாறு வாய் மொழி உத்தரவுகள் மூலம் திரையரங்குகள் படத்தை வெளியிடாமல் தடுத்து விடுவார்கள்.

கூட்டமைப்பு கூறுகிற தொகையை உடனடியாக செலுத்த முடியாத தயாரிப்பாளர் திட்டமிட்டபடி படத்தை வெளியிட கூட்டமைப்பின் மூலவர் வழிகாட்டுதல்படி உற்சவமூர்த்தி ஆலோசனை ஒன்றை தயாரிப்பாளருக்கு கூறுவார். அதனை தயாரிப்பாளர் நலன் கருதி தனது ஆலோசனையாக கூறுவதாக கூறுவதுடன் அந்த திட்டத்திற்கு கூட்டமைப்பை சம்மதிக்க வைக்க தான் முயற்சிப்பதாகவும் கூறுவார். படத்தை திட்டமிட்டபடி வெளியிட வேறு வழி இல்லாத நிலையில் தயாரிப்பாளர் சம்மதிக்க வேண்டிவரும். அப்படி சம்மதிக்கும் தயாரிப்பாளர், அல்லது விநியோகஸ்தர் மிகப் பெரிய மீள முடியாத வலைக்குள் சிக்க போகிறோம் என்பதை அப்போது அறிந்திருக்க மாட்டார்கள்.

சமரச சதிவலை என்ன?

இத்தொடரை தொடர்ந்து படித்து வரும் தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் விருப்பப்படி இன்று மாலை 7 மணி பதிப்பில் படிக்கலாம்..

குறிப்பு : இத் தொடர் சம்பந்தமாக தங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

ஆசிரியர் குறிப்பு

இராமானுஜம் : கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் விவரங்களை வெளியிட்டு வந்த வணிகப் பத்திரிகையான ‘தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட்’ மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.

முந்தைய கட்டுரை - கட்ட பஞ்சாயத்து நடத்தும் சங்கங்கள்!

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon