மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

சிம்பிளாக 43 லட்சம் பேரை கவர்ந்த முதியவர்!

சிம்பிளாக 43 லட்சம் பேரை கவர்ந்த முதியவர்!

யூடியூபில் தன்னை பின் தொடர்ந்தோருக்கு நன்றி தெரிவித்த முதியவரை ஒரே வாரத்தில் 43 லட்சம் பேர் பின் தொடர்ந்துள்ளனர்.

போர்ச்சுகீசிய நாட்டை சேர்ந்த 73 வயது முதியவர் நில்சன் ஐஸியாஸ் பாபின்ஹோ. யூடியூபில் சேனல் நடத்தி வரும் இவர், தனது தினசரி நடவடிக்கைகளையும், சிறு சிறு வேலைகளையும் படம்பிடித்து பதிவேற்றம் செய்து வைத்துள்ளார். ஆனால் இவரது சேனலுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட்டம் வரவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அவர் வீடியோக்களை பதிவேற்றம் செய்துகொண்டே இருந்தார். அவரே எதிர்பாராத விதமாக லட்சக்கணக்கானோர் அவரது சேனலுக்கு திரண்டுள்ளனர். அண்மையில், தன்னை பின் தொடர்ந்த நபர்களின் பெயர்களை காகிதத்தில் எழுதி அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை அவர் பதிவேற்றம் செய்திருந்தார். அவரது குணத்தால் பலர் ஈர்க்கப்பட்டு வீடியோவையும் வைரலாக்கிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து ஐஸியாஸ் பாபின்ஹோ யூடியூபில் ஒரு சூப்பர்ஸ்டாராக மாறிவிட்டார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் யூடியூப் சேனல் தொடங்கிய இவர் 32 வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். அவரது வீடியோக்கள் அனைத்துமே போர்ச்சுகீசிய மொழியில்தான் உள்ளது. ஆனாலும், அவர் செய்யும் வேலைகளால் ஈர்க்கப்பட்டு உலகளவில் போர்ச்சுகீசிய மொழி தெரியாதவர்களும் கூட அவருக்கு ரசிகர்களாக உருவாகியுள்ளனர். எந்த அளவுக்கு அவர் வைரலாகியுள்ளார் என்றால், ஒரே வாரத்தில் அவரை 43 லட்சம் பேர் பின் தொடர்ந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ட்விட்டரிலும் களம்புகுந்த அவரை 95,000 பேர் பின் தொடர்ந்துள்ளனர்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon