மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

திரையில் விரியும் வரலாற்று போர்!

திரையில் விரியும் வரலாற்று போர்!

சராகி போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கேசரி படத்தின் போஸ்டரை அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு இந்த ஆண்டில் மட்டும் ஐந்து படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு ரகத்தில் ரசிகர்களுக்கு வழங்க அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த காலத்தில் சிறந்த கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பெயர் பெற்றவர் அக்‌ஷய் குமார். மீண்டும் ஒரு சுவாரசியமான படத்தை அவர் தேர்வு செய்துள்ளார். அவர் நடித்துள்ள கேசரி படத்தின் போஸ்டரை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 1897ஆம் ஆண்டில் நடைபெற்ற சராகி போரில் பங்கேற்கும் ஒரு போர்வீரனாக அவர் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பரினீத்தி சோப்ரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த போஸ்டர் வெளியான பிறகு அக்‌ஷய் குமாரின் ரசிகர்கள் உட்பட பலரும் பாராட்டியுள்ளனர். இந்த படத்தை உருவாக்குவதற்காக அக்‌ஷய் குமாரும் இயக்குநர் கரன் ஜோகரும் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கூட்டணி அமைத்தனர். அதன்பின்னர் இப்படம் குறித்த பயணத்தை அக்‌ஷய் குமார் தொடர்ந்து தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வந்தார். படப்பிடிப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. மார்ச் 21ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

சராகி போரில் படைக்கு தலைமை தாங்கிய ஹவில்தர் இஷார் சிங்கின் கதாப்பாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சராகி போரில் 10,000 ஆப்கன் போர்வீரர்களை வெறும் 21 சீக்கியர்கள் மட்டும் எதிர்த்து போரிட்டனர். இதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon