மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

ஜன சேனாவில் இணைந்த ராமமோகன் ராவ்

ஜன சேனாவில் இணைந்த ராமமோகன் ராவ்

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த சமயத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் ராமமோகன் ராவ். அவருக்கு அடுத்துதான் தற்போதைய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். ராமமோகன் ராவ் தற்போது, திரைப்பட நடிகர் பவன் கல்யாண் நடத்தி வரும் ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார். பிப்ரவரி 11ஆம் தேதி விஜயவாடாவில் உள்ள ஜனசேனா கட்சி அலுவலகத்தில் பவன் கல்யாண் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு அரசியல் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தீ வீக் ஊடகத்திடம் ராமமோகன் ராவ் பேசுகையில், “பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேச மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். தெலுங்கு பேசும் மாநில பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் அவர் நம்பிக்கை அளிக்கிறார். தன்னோடு கட்சியில் இணைந்து பணியாற்றி, தன்னுடைய வெற்றிக்கு வழிகாட்டுமாறு பவன் கல்யாண் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஜெயலலிதாவிடமிருந்த குணங்களை நான் இவரிடம் பார்க்கிறேன். அதனால் கட்சியில் இணைய ஒப்புக்கொண்டேன்” என்றார்.

ராமமோகன் ராவ் 1985ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து 32 ஆண்டுகள் தமிழக அரசின் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2016 வரை தமிழக அரசின் தலைமைச் செயலாளராகவும் இருந்தார். ஜெயலலிதாவுடன் மிக நெருக்கமாக இருந்த அரசு அதிகாரிகளில் இவரும் ஒருவர். ராமமோகன் ராவின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரிச் சோதனைகள் நடத்தப்பட்டதால் 2017ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழக தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon