மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

வீடு விற்பனை: தென்மாநிலங்களில் உயர்வு!

வீடு விற்பனை: தென்மாநிலங்களில் உயர்வு!

2018ஆம் ஆண்டில் வடக்கு மற்றும் மேற்கிந்திய மாநிலங்களைவிட தென்மாநில நகரங்களில் வீடு விற்பனை வளர்ச்சி கண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் பிராபர்டி இந்தியாவில் வீடு விற்பனை நிலவரம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களில் 18 சதவிகிதமும், மேற்கு மாநில நகரங்களில் 15 சதவிகிதமும் வீடு விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது. அதேநேரம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களில் வீடு விற்பனையில் 20 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 77 சதவிகிதம் வளர்ச்சி கண்டு, 67,850 ஆக உள்ளது. தேசியத் தலைநகர் பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 16 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது. மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் இந்த வளர்ச்சி 17 சதவிகிதமாக இருக்கிறது. விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், தென்னிந்திய நகரங்களில் மொத்தம் 6.73 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. தேசியத் தலைநகர் பகுதியில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon