மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

சபரிமலையில் 3,000 போலீசார்!

சபரிமலையில் 3,000 போலீசார்!

மாசி மாத பூஜைக்காக இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவதையொட்டி சபரிமலை கோயிலில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இன்று (பிப்ரவரி 12) சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் திறந்திருக்கும். வரும் 17ஆம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்படும்.

சபரிமலைக்கு இம்முறை பெண் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வரக் கூடும் என்பதால், அதை முன்னிறுத்திப் போராட்டங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய மூன்று எஸ்பிக்கள் தலைமையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை சன்னிதானத்தில் எஸ்பி அஜீத் தலைமையிலும், பம்பையில் எஸ்பி மஞ்சுநாத் தலைமையிலும், நிலக்கல்லில் எஸ்பி மது தலைமையிலும், கேரள போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏற்கனவே, நிலக்கல் முதல் சபரிமலை சன்னிதானம் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் காலை 10 மணிக்கு மேல்தான் கோயில் பாதையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon