மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

ஸ்டீல் உற்பத்தியில் பின்னடைவு!

ஸ்டீல் உற்பத்தியில் பின்னடைவு!

ஜனவரி மாதத்தில் இந்தியாவின் கச்சா உருக்கு இரும்பு (ஸ்டீல்) உற்பத்தியில் 3.84 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

உலக ஸ்டீல் கூட்டமைப்பு சமீபத்தில் ஸ்டீல் உற்பத்தி குறித்த விவரங்களை வெளியிட்டது. அதில் ஸ்டீல் உற்பத்தியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தது. ஜாயின்ட் பிளான்ட் கமிட்டி அறிக்கையின்படி, சென்ற ஜனவரி மாதத்தில் இந்தியா மொத்தம் 8.995 மில்லியன் டன் அளவிலான ஸ்டீலை உற்பத்தி செய்துள்ளது. இது 2018 ஜனவரி மாத உற்பத்தியை விட 3.8 சதவிகிதம் குறைவாகும்.

2018ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா மொத்தம் 106.5 மில்லியன் டன் அளவிலான ஸ்டீலை உற்பத்தி செய்திருந்தது. அதே நேரம் ஜப்பானின் உற்பத்தி அளவு 104.3 மில்லியன் டன் மட்டுமே. ஜனவரி மாதத்தில் இந்தியாவின் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, ராஷ்ட்ரிய இஸ்பாத் நிகம் லிமிடெட், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மொத்தம் 5.486 மில்லியன் டன் அளவிலான ஸ்டீலை உற்பத்தி செய்திருக்கின்றன.

2030ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 300 மில்லியன் டன் அளவிலான ஸ்டீலை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதற்காக ரூ.10 லட்சம் கோடி வரையில் இந்தியா முதலீடு செய்கிறது.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon