மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

தத்ரூபமான சண்டைக் காட்சி: மடக்கிய கமண்டோ வீரர்கள்!

தத்ரூபமான சண்டைக் காட்சி: மடக்கிய கமண்டோ வீரர்கள்!

தினேஷ் நடிக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அதியன் ஆதிரை இயக்கும் இந்தப் படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான் விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீலம் புரொடக்‌ஷன் சார்பில் பா.இரஞ்சித் தயாரிக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளைச் சண்டைப் பயிற்சியாளர் சாம் மற்றும் இயக்குநர் அதியன் ஆதிரை சென்னை புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் எடுத்துக்கொண்டிருந்தனர்.

தினேஷ் வேகமாகச் செல்லும் லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சிகளைப் படமாக்கிக்கொண்டிருந்தனர் குழுவினர். கேமரா லாரிக்குள் இருந்ததால் ரோட்டில் செல்வோருக்கு நிஜமாக லாரியில் சண்டை நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த நேரத்தில் அந்த வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே இரவு நேரத்தில் சண்டை நடக்கிறது என்று லாரியைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதன்பின் படப்பிடிப்பு என்பதை அறிந்து திரும்பி சென்றுள்ளனர்.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் படக்குழு தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் மையமிட்டுள்ளது.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon