மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

பொருளாதார வளர்ச்சி: மோடி நம்பிக்கை!

பொருளாதார வளர்ச்சி: மோடி நம்பிக்கை!

வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 11ஆம் தேதி கிரேட்டர் நொய்டாவில் பெட்ரோடெக் 2019 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்திய வளர்ச்சி குறித்த தங்களது மதிப்பீடுகளில் இந்திய வளர்ச்சி வரும் ஆண்டுகளில் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளன. உலகப் பொருளாதாரம் நிலையற்ற சூழலில் இருக்கும் நிலையிலும் இந்தியா நிலையான வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலையில் உலகின் மிக வேகமாக வளரும் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதோடு, உலகின் ஆறாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்தது. சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிடும். முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் தற்போது இருக்கின்றன. கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் ஏதுவான வகையில் செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான ஆற்றல் தேவைகளை சிறப்பான முறையில் நம்மால் பூர்த்திசெய்ய முடியும்” என்றார்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon