மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 3 ஏப் 2020

டிஜிட்டலில் அறிமுகமாகும் நித்யா மேனன்

டிஜிட்டலில் அறிமுகமாகும் நித்யா மேனன்

நித்யா மேனன் முதன்முறையாக வெப்சீரிஸில் களமிறங்கியுள்ளார்.

இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் வெப்சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தமிழில் அறிமுக நடிகர், நடிகைகள், இரண்டாம்கட்ட நடிகர்கள் வெப்சீரிஸ்களில் களம் காண்கின்றனர்.

திரைப்படங்களில் பேசாத, பேச முடியாத பல கதைகள் டிஜிட்டல் தளங்கள் மூலம் வெளிவருகின்றன. சென்சார் இல்லை என்பதாலும் குறைந்த பட்ஜெட்டில் வெப்சீரிஸை உருவாக்கி அதிக செலவில்லாமல் வெளியிட முடியும் என்பதாலும் இது சாத்தியமாகிறது. மேலும், கால அளவைப் பொறுத்தவரை எவ்வளவு வேண்டுமானாலும் அதிகரித்துக்கொள்ளலாம். எனவே, இரண்டரை மணி நேரத்தில் சொல்ல வந்ததை சொல்லி முடிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.

மாதவன் இந்தியில் நடித்த வெப்சீரிஸான ‘ப்ரீத்’ அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாவது சீசன் தற்போது தயாராகவுள்ளது. முதல் சீசனை இயக்கிய மயங் அகர்வால் இந்த சீசனையும் இயக்குகிறார். மாதவனுக்குப் பதிலாக அபிஷேக் பச்சன், அமித் சத் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது கதாநாயகியாக நித்யா மேனன் இணைந்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ப்ரானா’ திரைப்படம் விமர்சனரீதியாக வரவேற்பு பெற்றது. தமிழில் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் அதிதி ராவ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரோடு இணைந்து நடித்து வருகிறார். ஜெயலலிதா பயோபிக்கிலும் நித்யா மேனன் கவனம் செலுத்திவருகிறார்.

அக்‌ஷய் குமார், சோனாக்‌ஷி சின்ஹா இணைந்து நடிக்கும் படம் மங்கள் மிஷன். இந்தப் படத்தின் மூலம் வித்யா பாலன் இந்தித் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon