மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 3 ஏப் 2020

டாஸ்மாக் சோதனை: அதிகாரியிடம் விசாரணை!

டாஸ்மாக் சோதனை: அதிகாரியிடம் விசாரணை!

டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத 2 லட்சத்து 40 ஆயிரத்து 380 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளராக இருந்து வருகிறார் முத்துகுமாரசாமி. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஏழு கோட்டங்களின் செயல்பாடுகள் இந்த அலுவலகத்தைச் சார்ந்து அமைந்துள்ளன. டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாற்றம், நியமனம் மற்றும் பார் குத்தகை போன்றவற்றில் லஞ்சம் பெறுவதாக முத்துகுமாரசாமி மீது தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 11) பிற்பகலில் திடீரென்று இந்த அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் புகுந்து சோதனை நடத்தினர். துணைக் காவல் கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் நடந்த சோதனையின் முடிவில், டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 2 லட்சத்து 40 ஆயிரத்து 380 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் முத்துகுமாரசாமியிடம் விசாரணை நடத்தினர். சுமார் நான்கு மணி நேரம் இந்தச் சோதனை நடைபெற்றது. ரொக்கப் பணத்துடன் மேலும் பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon