மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

பில்ராத் மருத்துவமனை விதிமீறல்: சிஎம்டிஏ பதில்!

பில்ராத் மருத்துவமனை விதிமீறல்: சிஎம்டிஏ பதில்!

விதி மீறிக் கட்டப்பட்டுள்ளதாக பில்ராத் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவைப் பரிசீலிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம்.

சென்னை ஷெனாய் நகரில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடம் தொடர்பாக, பில்ராத் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அரும்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மருத்துவமனை 3 மாடிகள் கட்ட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், விதிகளை மீறி சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் 10 மாடிகள் கட்டியது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளதாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

பில்ராத் மருத்துவமனையில் சாய்வுதள வசதி இல்லை என்றும், விதிமீறிய இந்த கட்டடத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை இதுவரை பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவானது இன்று (பிப்ரவரி 12) உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானி, நீதிபதி துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை பிப்ரவரி 25ஆம் தேதி பரிசீலிப்பதாகச் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon