மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

கிளாமரை கைவிட்ட சோனா

கிளாமரை கைவிட்ட சோனா

கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட காலங்களில் வாய்ப்புகள் அதிகமாக வருவது போல் தோன்றும். ஆனால் வெகுவிரைவில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டு புதிய நடிகைகள் வரத் தொடங்குவர். வெகுசில நடிகைகளை தங்களுக்கு இருந்த கிளாமர் பிம்பத்தை உடைத்து மற்ற கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி தொடர்ந்து பயணித்துள்ளனர். நடிகை சோனா அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

2001ஆம் ஆண்டு பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான சோனா பல படங்களில் கிளாமர் வேடங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். வடிவேலுவுக்கு ஜோடியாக அவர் நடித்த குசேலன் திரைப்படம் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள அவர் கிளாமர் வாய்ப்புகளை தவிர்த்துவிட்டு சவாலான கதாபாத்திரங்களை நடிக்க ஆர்வம் காட்டினார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஒப்பம் படத்தின் மூலம் அந்த வாய்ப்பு அவருக்கு அமைந்தது.

தமிழில் பல்வேறு வாய்ப்புகளைத் தவிர்த்து வந்த சோனா தற்போது அவதார வேட்டை என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். வி.ஆர். விநாயக் கதாநாயகனாக நடிக்க சோனா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுவரை அவர் நடித்திராத கதாபாத்திரமாக அது உருவாகியுள்ளது. ராதாரவி, சம்பத், மகாநதி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஸ்டார் குஞ்சுமோன் இயக்குகிறார்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon